சிறுமியை வன்புணர்வு செய்த தாயின் காதலன்!! காவல்துறையினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
15 வயதுடைய மகளை வன்புணர்வு செய்த தாயின் காதலன் புத்தளை காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவரது தாயார் அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் வசித்து வந்துள்ளார்.
அவர் சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
வயிற்றில் வலி இருப்பதாக கூறி இன்று வைத்தியசாலை சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி நீதித்துறை மருத்துவ அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 44 வயதான சந்தேக நபர் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.