17 வருடங்களாக சிறைச்சாலையில் தந்தை: தாயுமின்றி போராடும் ஆனந்த சுதாகரனின் மகள்
2008 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆனந்த் சுதாகரன், 2017 இல் PTA (Terrorism Prevention Act) உட்பட்ட வழக்கின் முடிவில் ஆயுள் தண்டனை பெற்றார்.
தற்போது, 17 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஆனந்த் சுதாகரனின் 36 வயதான மனைவி யோகராணி 2018 இல் உயிரிழந்திருந்த நிலையில், தாயும் இல்லாது தந்தையும் இல்லாது அவருடைய இரண்டு பிள்ளைகளும் தற்போது வரை தனித்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு, ஆனந்த சுதாகரை மனைவியின் மரணச் சடங்கிற்கு அழைத்து வந்திருந்த போது, அவரின் மகள் சிறைச்சாலை பேருந்தில் ஏறிச்செல்ல முயற்சி செய்திருந்தமை தற்போது வரை யாராலும் மறக்க முடியாத ஒரு சம்பவம்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக, அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் உள்ள அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த மக்களின் நம்பிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், இத்தனை வருடங்களாக தாய் மற்றும் தந்தை இல்லாது வலி சுமந்த பிள்ளைகள் தற்போதைய அரசாங்கமாவது தமக்கு நல்வழிக்காட்டுமா என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆனந்த சுதாகரனின் மகள் சங்கீதா லங்காசிறி ஊடகத்திற்கு தனது கருத்தினை தெரிவித்துள்ளதுடன் தாங்கள் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்தும் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
