13 வயது மகள் பாலியல் வன்புணர்வு பெற்றோர் எடுத்த விபரீத முடிவு
தமது பதின்மூன்று வயது மகள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த பெற்றோர்கள் இருவரும் நேற்று முன்தினம் (18) மாலை வெலிமடை காவல் நிலையத்தில் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடையைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் சரோஜா என்ற தம்பதியினரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
சிறுமி கைது
பதின்மூன்று வயது மகளின் மோசமான நடத்தையால், இந்த தம்பதியினர் சில காலமாக கடும் விரக்தியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சிறுமி 28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவு கொண்டிருந்ததாகவும், ஆறு நாட்களுக்கு முன்னர் அந்த இளைஞனுடன் வாழ்ந்து வந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிமடை நகரில் சுற்றித் திரிந்த சிறுமியை, நகர மக்கள் அளித்த தகவலின்படி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு வைத்தியசாலையில் காவல்துறையினர் அனுமதித்தனர், அங்கு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்திற்குள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
பின்னர் சிறுமியின் பெற்றோரை வரவழைத்த காவல்துறையினர் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்குள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர், தம்பதியை வெலிமடை மருத்துவமனையில் காவல்துறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
வன்புணர்வுக்குள்ளாக்கிய இளைஞன் கைது
பதின்மூன்று வயது சிறுமியைவன்புணர்வு செய்த 28 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெலிமடை காவல் நிலைய பிரதான பரிசோதகர் சம்பத் அபேவிக்ரம தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
