லண்டனில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் தொங்கிய உடல் !
பிரித்தானியாவின் லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய விமானம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மொராக்கோவின் Tangier நகரிலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த Air Arabia Maroc நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்திலேயே உயிரிழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
விமானம் தரையிறங்கியதும் சக்கரத்தின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீட்புக் குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டனர்.
லண்டன் கேட்விக் அவசரப் பிரிவினரும் மற்றும் சசெக்ஸ் காவல்துறையினரும் மீட்டுள்ளனர்.

இது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானியாவுக்குச் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |