தமிழர் தாயகத்தில் துக்க தினம் - தமிழரசு கட்சி எடுத்துள்ள முடிவு
தமிழர் தாயகத்தில் யூலை படுகொலைகளை நினைவுறுத்தி இம் மாத இறுத்திக்குள் துக்கதினத்தை கடைப்பிடிக்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மாவை சேனாதிராஜா, இதனை தெரிவித்துள்ளார்.
இனப் படுகொலைகளுக்கு சான்றான மனித புதைகுழி விவகாரங்கள் சர்வதேச நியமங்களுக்க அமையவே முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமகால விடயங்கள் ஆராய்வு

யாழ் - கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், த.கலையரசன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் , ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிறீநேசன், சாந்தி சிறீஸ்கந்தராசா முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் யாப்பு திருத்தம், தேசிய மாநாடு உள்ளிட்ட சமகால விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்