வித்யாரத்னவுடன் தயாசிறி - மரிக்கார் கடும் வாக்குவாதம்
சிறப்புரிமை பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எஸ்.எம். மரிக்கார் மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினைக்கு அமைச்சர் வித்யாரத்ன முதலில் பதிலளித்தார்.
அமைச்சர் தனது சிறப்புரிமைகளையும் கருத்து தெரிவிக்கும் உரிமையையும் மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதை அடுத்து மேற்படி வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அதிர்தரப்பில் உள்ளவர்களால் எம்.பி.யின் உரிமைகள் மீறப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பின்னர், எம்.பி. ஜெயசேகர அரசியலமைப்பு சபையின் உள் தகவல்களை வெளிப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, அரசியலமைப்புச் சபையின் ஒரு உறுப்பினருக்கு எதிராக மட்டுமே சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பியதாகக் கூறினார். மேலும், அமைச்சர் கருத்துபொருளின்றி பேசுகிறார்," என்று தயாசிறி ஜெயசேகரா கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |