சகல மதுபானசாலைகளும் பூட்டு..! வெளியானது அறிவிப்பு
மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று(03) இலங்கையில் உள்ள சகல மதுபான கடைகள் மற்றும் மதுபான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களமே இந்த விடயத்திணை அறிவித்துள்ளது.
நாட்டில் மது பாவனை குறைவு
இதேவேளை, அண்மையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களின் காரணமாக சில வகை மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிகரெட் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தார்
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக இவ்வாறு கடந்த காலத்திலத்துடன் ஒப்பிடும் போது மது பாவனை குறைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)