ஹோட்டல் ஒன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு
அம்பாறை பொத்துவிலில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் ஆண் மற்றும் பெண்ணின் உடையது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொத்துவில் – அறுகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து நேற்று(12) இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறையில் தங்கியிருந்த இருவரும் கதவை திறக்காததால்
அறையில் தங்கியிருந்த இருவரும் கதவை திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து ஹோட்டல் முகாமையாளர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்தறிகு வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
அவர்கள் அறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணைக் கண்டுபிடித்தனர், அதே நேரத்தில் ஆண் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உயிரிழந்த பெண் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும்,ஆண் புத்திவிலைச் சேர்ந்த 51 வயதானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். புத்திவில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |