பேலியகொடவில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் காவல்துறை
ஆணொருவரின் சடலம்
பேலியகொட, களனி கங்கையின் 4 ஆவது மைல் கல் பகுதியிலிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான எவ்வித தகவலும் இதுவரையில் தெரியவரவில்லை என காவல்துறை ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல் சடலமாக மீட்கப்பட்ட நபர் 25 தொடக்கம் 35 வயதுடையவராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
அத்துடன் குறித்த நபர் 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடலமைப்பு கொண்டவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த நபர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட மேலாடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு பிரேத பரிசோதனைக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேலியகொட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
