கடலில் நீராடச் சென்று மாயமான மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு..!
                                    
                    Matara
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Death
                
                        
        
            
                
                By Dharu
            
            
                
                
            
        
    மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதில் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
நேற்று(17) மாலை மாத்தறை, வெல்லமடம கடலில் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.
தேடும் பணி

மேலும், இவர்களில் ஏனைய இருவரையும் தேடும் பணி தொடர்வதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            மரண அறிவித்தல்