தீப்பற்றி எரிந்த வீடு - தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்
By pavan
வவுனியா - தேக்கவத்தை பகுதியில் எரிந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடு தீப்பற்றியேறிவதாக அயவலர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயனைப் பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
மேலதிக விசாரணை
பின்னா் வீட்டினுள் குடும்பஸ்தர் ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினருக்கு தகவல் வழங்கபட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
