8 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Independent Writer
வீடொன்றில் இருந்து சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (28) இரவு கெஸ்பேவ, மடபாத்த - மாகந்தன பட்டுவந்தர பகுதிகளில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உடல் மிகவும் சிதைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாகவும், மரணம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்