வீடொன்றில் இருந்து மாணவன் சடலமாக மீட்பு
வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை - சாய்ந்தமருது காவல்துறை பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அறைக்குச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (09) காலை உயிர்மாய்ப்பு செய்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணை
அவர் தவறான முடிவெடுத்து உயிர் மாத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

16 வயதுடைய குறித்த மாணவன் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் மாணவரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 8 மணி நேரம் முன்