பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணம் (படங்கள்)
Sri Lanka Police
Mullaitivu
By Vanan
வீட்டுக் காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய, கணுக்கேணி கிழக்கு முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த, 72 வயதுடைய, தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
