வெட்டுக்காயங்களுடன் நபரின் சடலம்- தற்போது வெளியாகியுள்ள பரபரப்புத் தகவல்!
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சி காவல்துறை பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கு தனிப்பட்ட முரண்பாடுகளே காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
பரந்தன் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகை ஒன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி-பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் தற்காலிக கொட்டகையில் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான விபரங்கள் இது வரை கிடைக்கப்பெறவில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது களத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You May Like This
