ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த கடுமையான எச்சரிக்கை!
இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரானை எச்சரித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் ஆட்சி வீழ வேண்டும் அல்லது சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் கொடுக்க வேண்டிய விலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப்பின் இராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த நெதன்யாகு, ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ட்ரம்பின் முன்மொழிவு
முறையான உறவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சவூதி-இஸ்ரேல் உறவை சீராக்குவதற்கு ட்ரம்ப் முன்மொழிந்த நிபந்தனையான ரியாத்துக்கு ராணுவ அணுசக்தி திட்டம் இல்லாமல், சிவில் அணுசக்தித் திட்டத்தை வழங்கும் முன்மொழிவை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Image Credit: Reuters
லெபனான் குறித்துப் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலியப் படைகள் ஹெஸ்பொல்லாவை இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து 5 முதல் 8 மைல்கள் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகவும், அதன் தோராயமாக 150,000 ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளில் சுமார் 94 வீதத்தை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |