காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நபர் திடீர் மரணம்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By pavan
களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுத்துறை தெற்கு சேனவிரத்ன பிளேஸைச் சேர்ந்த கஜநாயக்க முதலிகே நாலக துஷார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவிற்குட்பட்ட காணி ஒன்று தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி