குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்
Jaffna
Death
By pavan
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் நேற்று முன்தினம் (14) காணி ஒன்றினை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை

நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நடராசா சந்திரமோகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (15) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி