ஆலயத்தில் வேலை செய்த இளைஞன் திடீரென உயிரிழப்பு! தமிழர் பகுதியில் நடந்த துயரம்
Sri Lanka Police
Sri Lanka
Death
By pavan
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றின் தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் சடலம்
வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலத்தை கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி