யாழின் முன்னாள் பிரதேச சபை தவிசாளரின் வீட்டின் முன் குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு!
வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் தவறான முடிவெடுத்த பெண் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(17) அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி
குறித்த பெண் வலி வடக்கு பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் என்பதுடன், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் அவருக்கு 10 வயதில் ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண், நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார். தீ அணைக்கப்பட்டதையடுத்து கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(17) அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தவிசாளரின் மனைவி
இந்த பெண்ணுக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாகவும் அதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அயலவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை வலி வடக்கு முன்னாள் தவிசாளரின் மனைவி நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
