தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு புனித வளநகர் வட்டார வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை அச்சுறுத்தல்

இந்த நிலையில் அற்புதம் சற்குணதாஸ் சற்று முன்னர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அங்கு தனக்கு விடுவிக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நான் தேர்தலில் போட்டியிடுவது பல கட்சியினருக்கு பிடிக்காமல் உள்ளது. அதனால், எனக்கு கொலை அச்சுறுத்தல் வந்தவண்ணமுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 2 தடவைகள் தொலைபேசி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
50 வருட அரசியல் பின்புலம்

நான் 50 வருட அரசியல் பின்புலம் கொண்டவன். கடந்த காலங்களில் இலங்கை தமிழரசு கட்சியுடனேயே பயணித்துள்ளேன். வேறு எந்த கட்சியிலும் இணைந்தவன் கிடையாது.
பல கட்சிகள் தம்முடன் இணையுமாறு கோரிக்கை விடுத்து வந்தாலும், நான் முடியாது என்று ஆணித்தரமாக கூறியுள்ளேன். என்னுடைய அரசியல் வாழ்க்கை நேர்மையுடைதாகவே இருக்கிறது.
இன்றைய சூழ்நலையில், எமது கட்சியை உடைப்பதற்கு சிலர் கங்கணம் கட்டி பொய் பிரசாரங்களை மேற்காண்டு வருகின்றார்கள்" - என்றார்.