கோட்டை நீதவானுக்கு கொலை மிரட்டல்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
CID - Sri Lanka Police
Colombo
Sri Lanka Magistrate Court
By Dharu
கோட்டை (Fort) பகுதி நீதவான் பாசன் அமரசேனவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதவானுக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் ஆகஸ்ட் 11 ஆம் திகதி கிடைக்கப்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் இது குறித்த விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம்
இச்சம்பவம் தொடர்பாக நீதவான் பாசன் அமரசேனவிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்கடிதம் தொடர்பான முறைப்பாடு ஒன்று நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்