கத்திக்குத்துக்குப் பின்னரும் விமானத்தை காப்பாற்றிய இந்திய விமானி! குவியும் பாராட்டு
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளை துபாய் (flydubai) விமானத்தில், கத்திக் குத்துத் தாக்குதலில் காயமடைந்த நிலையிலும் போராடி 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய முதன்மை விமானியின் செயலை இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு பாராட்டியுள்ளது.
உத்தியோக பூர்வ எக்ஸ் தளத்தில் விமானியின் புகைப்படத்தை பகிர்ந்த இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு பின்வருமாரு அவருக்கு பாராட்டு செய்தியை வெளியிட்டுள்ளது.
விமானத்தின் காக்பிட்டுக்குள் கத்திக்குத்துக்கு இலக்கான போதிலும், கடுமையான காயங்களையும் பொருட்படுத்தாமல் விமானக் கதவைத் திறந்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் பாராட்டைப் பெற்றுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான விமானி
flydubai 1073 விமானத்தின் இந்திய விமானியான மச்சார், காக்பிட்டுக்குள் கத்திக்குத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையிலும் அவர் காக்பிட் கதவைத் திறக்க முடிந்ததால், விமானத்தில் இருந்த இஸ்ரேலிய பயணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பணியாளர்களும் உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் விமானத்தில் இருந்த 174 பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர், இஸ்ரேலியர், எமிராட்டி என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வெளிப்படுத்திய துணிச்சல், ஒருங்கிணைப்பு மற்றும் மனிதநேயம் இந்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்” என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |