நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
இலங்கையில் நிலவும்,மோசமாக காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐந்து பேர் காணமால் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை
சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்ந்தமையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் பல பிரதேசங்களில் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, 011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் அனர்த்த நிவாரண தேவைகளுக்காக அழைக்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |