அமெரிக்க எல்லையில் மர்மம்! 19 கருகிய சடலங்கள் மீட்பு
அமெரிக்க எல்லைக்கு அருகில் மெக்சிகோவின் டமவுலிபாஸ் மாநிலத்தில் 19 சடலங்கள் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள கமர்கோ நகரில் 19 மனித சடலங்கள் கொண்ட 2 எரிந்த வாகனங்களை பொலிஸ் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழந்தோர் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டு, பின் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கி ரவைகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அவர்கள் வேறு இடத்தில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
அரசாங்க தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி, உயிரிழந்தவர்கள் கள்ளக் குடியேறிகளா என்பதை தீர்மானிக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அவர்கள் குவாந்தமாலாவைச் சேர்ந்த குடியேறிகளாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை அப்பகுதி, மெக்சிகோவின் போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் இடம் என்றும் கூறப்படுகிறது.