இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (21.07.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 2.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான இரு தீர்மானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 2.30 முதல் 5.30 வரை பத்தாவது நாடாளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் பணி மற்றும் செயல்திறன் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |