செம்மணியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக் குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில் நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்தை நேற்று (21-07-2026) பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மனித புதைகுழி
நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாளை (22-07-2026) காலை 9 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர்.

மேலும் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (21-07-2026) நடைபெற்ற நிலையில் சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்