சீனாவிடம் சிறிலங்கா விடுத்துள்ள கோரிக்கை
கடன் நிவாரணம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம், சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் ஒப்பந்தங்களில் மாற்றங்களை மேற்கொள்வது இலகுவான விடயம் அல்லவென ஜப்பானின் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடனை மறுசீரமைப்பு
“கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை சீன அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம்.
அனைத்து கடன் வழங்குநர்களிடமும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
எனினும் கடன் மறுசீரமைப்புக்களுக்கு பதிலாக தாம் வழங்கிய கடன்களை மீளச் செலுத்துவதற்கு மீண்டும் நிதியளித்தல் அல்லது தமது வங்கிகளுக்கு கடனை செலுத்த வேண்டிய திகதியை பிற்போடுவது உள்ளிட்ட யோசனைகளை சீன அரசாங்கம் முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சீனாவிடம் இலங்கை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை -வெளிப்படுத்திய சர்வதேச ஊடகம்
திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி