மொட்டுக் கட்சியின் இறுதித் தீர்மானம் மகிந்தவின் கையில்..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எடுக்கும் நிலைப்பாடு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 29 ஆம் திகதி கட்சியின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
ரணிலுக்கு ஆதரவு
அதற்கு முன்னதாக இன்றும் நாளையும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கட்சி ஏற்கனவே கணிசமான அளவில் பிளவுபட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
அவர்களில் ஒரு குழுவினர் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவிடம் இது குறித்து அறிவித்துள்ளனர்.
வேட்பாளர்
ஜனாதிபதி ஆதரவளிப்பதை தவிர்த்துவிட்டு வேறொரு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்று மற்றொரு குழு கூறுகிறது.
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகள் இன்றும் நாளையும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |