ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன் குறைப்பு தொடர்பில் முக்கிய தீர்மானம்
மொராக்கோவில் சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாடுகள் ஒக்டோபர் மாத இறுதியில் இடம்பெறவுள்ள நிலையில் அக்காலப்பகுதியில் இலங்கையுடன் உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள அமெரிக்கா ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடனை திருப்பி செலுத்துவதை நீடிப்பது உட்பட முக்கிய தீர்மானங்களை இந்த நாடுகள் எடுக்கவுள்ளன.
இலங்கை, ஜப்பான் இந்தியா சீனா உட்பட அதற்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தனது வெளிநாட்டு கடன் தொடர்பில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
சீனாவின் நிலைப்பாடு
கடந்த வருடம் மே மாதம் தனது கடன்களை மீளச்செலுத்துவதை ஒத்திவைத்த பின்னரே இலங்கை இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
மேலும், சீனா இந்த குழுவில் சேர்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஆனால் ஒரு பார்வையாளராக நீடிக்கின்றது.
சீனாவுடன் இணைந்தோ அல்லது சீனா இல்லாமலோ இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் மத்தியில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு முயல்கின்றோம் என ஜப்பானின் நிதியமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்களால் முடிந்ததை செய்வோம் ஆனால் இந்தமாதம் இது சாத்தியமாகுமா என்பதை தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ள அந்த அதிகாரி சர்வதேச நாணயநிதியத்தின் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் இதனை செய்யலாம் என தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.