காவல்துறை மா அதிபர் பதவி தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்
சிறிலங்காவில் வெற்றிடமாகவுள்ள காவல்துறை மா அதிபர் பதவி தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று (09) பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அந்த கலந்துரையாடலின் போது புதிய காவல்துறை மா அதிபர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என காவல்துறை தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை மா அதிபர் பதவிக்கு யார் நியமிக்கப்பட்டாலும் அவர் 3 மாத காலத்திற்கு மட்டுமே பதில் கடமையாற்ற நியமிக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதித் தீர்மானம்

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், காவல்துறைமா அதிபர் பதவி இன்னும் வெற்றிடமாகவே உள்ளது.
அதன்படி, காவல்துறை மா அதிபர் பதவி வெற்றிடமாகி 14 நாட்கள் கடந்துள்ள நிலையில் பல ஊடகங்களில் சி.டி. விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவையை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், காவல்துறை மா அதிபர் பதவி தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடலின் போதே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்