விஜயதாச ராஜபக்சவின் எம்.பி பதவி குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானம்
சிறிலங்காவின் நீதியமைச்சராக உள்ள விஜயதாச ராஜபக்சவின் (Wijeyadasa Rajapakshe) கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானிக்கவுள்ளது.
அதற்கான அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் நாளை (24) கொழும்பில் (Colombo) இடம்பெறவுள்ளது.
இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அந்தக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீறப்பட்டுள்ள கட்சி யாப்பு
பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக இருந்து கொண்டே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP)தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதன் ஊடாக, விஜயதாச, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி யாப்பை மீறி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் அவரது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்க நேரும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |