அவசரகால மருந்துக் கொள்வனவு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
Dr Ramesh Pathirana
Sri Lanka
India
Drugs
By Sathangani
அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டும் அவசரகால மருந்துக் கொள்வனவுகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மருந்துகள் கொள்வனவு
அதன்படி, பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களினால் மாத்திரமே மருந்துகள் கொள்வனவு செய்யப்படும்.
மேலும், குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள் சில மருந்துகளை வழங்க முன்வருவதில்லை என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில், பொருத்தமான மருந்துகள் இந்திய அரசாங்க முகவர் மூலமாக கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி