யாழில் வளி மாசடைதல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
யாழ். மாவட்டத்தில்(Jaffna) வளி மாசுபடுதல் தொடர்பாக சுற்றாடல் அதிகார சபையினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்றையதினம்(07.02.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காற்றின் தரம் தொடர்பில் பரிசோதிக்க ஏற்கனவே இருந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டு அவை தற்போது மீளப் பொருத்தப்பட்டிருக்கின்றன.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
அதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் வளி மாசுபடுதலின் தன்மைகள் குறித்து அவதானிக்கப்பட்டு சுற்றாடல் அதிகார சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் முடிந்தவரை பொதுமக்கள் முககவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |