சுதந்திரக்கட்சி எடுத்துள்ள தீர்மானம் - அரசுக்கு கடும் நெருக்கடி
mahinda amaraweera
decision
gotabaya
slfp
By Sumithiran
அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் எந்தவொரு அமைச்சுப்பதவியைஏற்பதில்லையெனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பதவி விலகிய நிலையில் மீண்டும் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் அரச தலைவருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி