அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானங்கள் -அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது மாற்று வழியை சிந்திப்பதா என்பது தொடர்பில் இந்த வருடத்தில் பல கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksha) இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை பணிப்புறக்கணிப்பு காரணமாக மாற்றக்கூடாது என இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சில அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கிடைக்காமல் திறைசேரி பணத்தை நம்பியிருக்கும் சூழ்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அந்த நிறுவனங்களை மேலும் நட்டத்தில் இயங்கச் செய்யாமல் இந்த ஆண்டு இது தொடர்பில் தீவிர தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.