தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
Ministry of Education
Parliament of Sri Lanka
A D Susil Premajayantha
Education
By Laksi
தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.06.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது.
மாணவர் சேர்க்கை வீழ்ச்சி
சில வருடங்களுக்கு முன்னர் 330,000ஆக இருந்த இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது குறைந்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை குறையும். இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகி தனியார் வகுப்புகளை நோக்கி இழுக்கப்படுகின்றனர்.
ஏனெனில் நாட்டின் கல்வி முறையின் மீது பிள்ளைகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்