நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்
காலி(Galle) மற்றும் மாத்தறை(Matara) மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகும் என தென் மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது வெள்ள அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இடம்பெயர் முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு இது தொடர்பில்லை எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்திருந்தது.
பாடசாலைகள் திறக்கப்படுமா
இந்நிலையில் தற்போது, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி கல்வி வலயம், இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் அஹெலியகொட ஆகிய பிரிவுகளில் நாளை (06) பாடசாலைகள் நடைபெறாது என சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிவித்திகல பிரதேசத்தின் அலபாத மற்றும் அயகம பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் நாளை நடைபெறாது என அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 20 மணி நேரம் முன்
