இலங்கையில் வெதுப்பக உற்பத்தி விற்பனையில் கடும் வீழ்ச்சி
Sri Lanka
Sri Lanka Food Crisis
Money
By Shalini Balachandran
பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் கேள்வியும் 25 சதவீதத்தால் குறைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் வெதுப்பக உற்பத்திகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெதுப்பக உற்பத்தி
இந்நிலையில் இதற்கு இணையாக பாண் மற்றும் கேக் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெதுப்பக உற்பத்தி பொருட்களின் கேள்வியும் குறைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்