பிரபாத் ஜெயசூரியவின் ஐ.சி.சி பதிவேட்டில் பதிவாகிய புள்ளிக்குறைப்பு
ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் வீரர் பிரபாத் ஜெயசூரியவுக்கு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ஆட்டமிழந்த பிறகு, தனது மட்டையால் எல்லை கோட்டு அடையாளங்களை தாக்கியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
A third player has been sanctioned by the ICC for an incident during the second #WTC27 contest between Sri Lanka and India in Colombo.https://t.co/WzZVABH8uT
— ICC (@ICC) August 25, 2026
மூன்றாவது வீரர்
“இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை பெற்றதையடுத்து, தண்டனைக்கு உள்ளான மூன்றாவது வீரராகியுள்ளார்.

ஜெயசூரிய, சர்வதேச போட்டியின்போது “கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதான உபகரணங்கள் அல்லது பொருத்தப்பட்ட சாதனங்களை தவறாகப் பயன்படுத்துதல்” தொடர்பான ஐசிசி வீரர்கள் மற்றும் வீரர் உதவிப் பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறையின் 2.2ஆம் பிரிவை மீறியதாகக் கண்டறியப்பட்டார்.
இதனையடுத்து அவரது ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு குறைபாட்டுப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மாத காலப்பகுதியில் இது அவரது முதல் குற்றமாகும். திங்கட்கிழமை அன்றைய ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பின்னர், மீண்டும் ஆடை மாற்றும் அறைக்குச் செல்லும் வழியில் ஜெயசூரிய தனது துடுப்பினால் எல்லைக் கயிற்றின் தடுப்புப் பகுதிகளைத் தாக்கிய சம்பவமே இதற்குக் காரணமாகும்.
ஜெயசூரிய தனது தவறை ஒப்புக்கொண்டு, எமிரேட்ஸ் ஐசிசி எலைட் நடுவர் குழுவைச் சேர்ந்த போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழிந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதனால் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |