விடுதலைப்புலிகளை அழிக்கும் திட்டத்தை தெரிவித்த சோனியாகாந்தி - நவீன் திஸநாயக்க பரபரப்பு தகவல்
விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இலங்கைக்கு இந்திய அரசாங்கம் நேரடியாக ஆதரவளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த முடிவை சோனியா காந்தி தனது தாயார் ஸ்ரீமா திஸாநாயக்கவிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நிலையில், போரை தோற்கடிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படாத இரகசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கு நெருக்கமான இருவரை உயர்த்தியதன் மூலம் கட்சியில் மூத்தவர்களுக்கு அநீதி இழைத்து வருவதாக நவீன் திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், பிரதித் தலைவர் மற்றும் தலைவர் பதவிகள் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பத்திற்கேற்ப நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
உரிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், செயற்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உரிய நியமனங்களுக்கு இணங்கியிருக்க மாட்டார்கள் என்றார். அதிகார பேராசையால் கட்சியை அரவணைப்பது கட்சியை கலைக்கவே வழிவகுக்கும் எனவும் இந்த நிலை ராஜபக்ச ஆட்சியிலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதித் தலைவரை தெரிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவருக்கான தேர்தல் தொடர்பில் கட்சியின் பல மூத்த உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைமைத்துவம் தெரிவிக்கவில்லை எனவும் .திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களின் வலுவான கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு நெகிழ்வான ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றும், ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று திஸாநாயக்க வலியுறுத்தினார்.
