பிரித்தானிய கடையொன்றில் தமிழர்களுக்கு நேர்ந்த அநீதி!
London
United Kingdom
Money
By Laksi
பிரித்தானியாவில் தமிழர்கள் அதிகம் காணப்படும் பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்-Hayes பகுதியிலுள்ள கடை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளருக்கு எதிராக வழக்கு
வர்த்தக தரநிலை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தமை தொடர்பில் கடையின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடையின் உரிமையாளர் குற்றத்தினை ஒத்துக்கொண்டுள்ள நிலையில், 4463 பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
குறித்த கடையில் பாதுகாப்பற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்