மீண்டும் தீவிர மோதல்: மத்திய காஸாவில் தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேலிய படைகள்
ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகளில் தோல்வியடைந்த பின்னணியில் இஸ்ரேலிய இராணுவம் தற்போது காஸாவின் டெய்ர் அல் பலா நகரத்தின் மீது தரை மற்றும் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
குறித்த தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் இன்று ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம், இஸ்ரேலிய படைகள் டெய்ர் அல்-பலாவின் தென்மேற்கில் உள்ள ஆறு தொகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரித்திருந்தது.
விமானங்கள் மற்றும் பீரங்கிகள்
இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் (ஜூலை 21), தரை மற்றும் வான்வழி தாக்குதல்கள் குறித்த பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, டெய்ர் அல்-பலாவில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் மீது சில சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
