காத்திருக்கும் எரிபொருள் கப்பல்கள்..! அதிர்ச்சியடைய வைக்கும் தாமதக் கட்டணம்
கட்டணம்
கொழும்பு துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட மூன்று எரிபொருள் கப்பல்கள் சில நாட்களாக தரித்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு தரித்து நிற்கும் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கப்பல்களுக்கு செலுத்த கையிருப்பில் போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தினால் அந்தக் கப்பல்களின் எரிபொருள் இறக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள்
பெருந்தொகை எரிபொருட்களுடன் இந்த மூன்று கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு காத்திருப்பதாக பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
டொலர்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் எரிபொருள் கப்பல்களுக்கு பெருந்தொகை தாமதக் கட்டணங்களை செலுத்த நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்ட வரிசையுகம் கியு.ஆர் முறை மூலம் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டாலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்பொழுது மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பரவலான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
