பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்
எரிபொருள் விலை
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாலித தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 27 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதால் நாட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து எரிபொருளின் விலையும் 70 ரூபாவால் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய கடந்த 15ம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காடினார்.
உலக சந்தையில் குறைவடைந்த எரிபொருள் விலை
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்திருப்பதால் அதன் பலனை நாட்டு மக்களும் அனுபவிக்க வேண்டும் எனவும் அதற்கமைய எரிபொருளின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஒரு லீட்டர் 95ரக பெட்ரோலுக்கும் சுப்பர் டீசலுக்கும் முறையே 80 ரூபா மற்றும் 67 ரூபா வரி விதிக்கப்படுகிறது.
இதே வேளை ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 220 ரூபவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவை பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
எரிபொருள் விலை இன்று குறைய வாய்ப்பு..! வெளியான தகவல் |
எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானம்..! |