எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானம்..!
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
Petrol diesel price
By Kanna
எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்களை கிடைக்கப்பெற்றுள்ளன.
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை
எவ்வாறாயினும், நேற்று எரிபொருள் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், விலைச்சூத்திரத்தின்படி எரிபொருளின் விலையில் எந்த திருத்தமும் செய்யாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், இது குறித்து எரிசக்தி அமைச்சு எந்தவிதமான விளக்கத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி