குறைக்கப்பட்டது எரிபொருளின் விலை..! வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
லங்கா ஐஓசி நிறுவனமும் டீசலின் விலையை பத்து ரூபாவினால் குறைத்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இன்று (01) நள்ளிரவு 10 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசல் விலையை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 430 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், ஏனைய எரிபொருள் வகைகளில் எவ்விதமான விலை மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதன்படி, எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படலாம் என அமைச்சரின் அறிவிப்பை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிட்ரோ எரிவாயுவின் விலையும் குறைகிறது
உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அந் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான செய்தி, லிட்ரோ எரிவாயு நிறுவனம் சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!