வாகனங்களை இறக்குமதி செய்வதில் தாமதம்: வெளியானது காரணம்
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தாலும், வாகனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு கணிசமான காலம் எடுக்கும் என ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து வழங்கப்படும் கடன் கடிதங்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என ஜப்பானிய வங்கி அமைப்பு ஏற்கனவே இலங்கையிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளதாகவும், எனவே அந்த முடிவை இடைநிறுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே, ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கணிசமான காலம் எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய வாகனங்கள்
அத்தோடு, இலங்கை அரசாங்கம் ஜப்பான் வங்கிக்கு வழங்கிய உத்தியோகபூர்வ அறிவிப்பு காரணமாக இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் செலுத்தப்படாது என சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்ய மீண்டும் தீர்மானிக்கப்பட்டாலும் கடன் கடிதங்களை செயற்படுத்தும் நடவடிக்கைக்கு சிறிது காலம் என எடுக்கும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |