போராட்டத்தால் அதிரும் டெல்லி....! மத்திய கல்விச் செயலாளர் பணியிட மாற்றம்
மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
வினாத்தாள் முறைகேடு
இதையடுத்து புதிய கல்வி செயலராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் மற்றும் கல்வி முறையில் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு நேற்றிரவு திடீரென மத்திய உயர் கல்வித்துறை செயலாளரை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே போல் பிரதமர் மோடியின் வாக்குறுதியின்படி வினாத்தாள் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விரைவு சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பலிகா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |