மீண்டும் உலகை அச்சுறுத்த வருகின்றது “AY.4.2”! 42 நாடுகள் குறித்து வெளியான புதிய செய்தி
people
WHO
new corona
AY.4.2
By Shalini
உருமாறிய டெல்டா வைரஸின் துணை வைரசாக AY.4.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியதாகும்.
இந்த வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆந்திராவில் 7 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும், தெலுங்கானாவிலும், கர்நாடகத்திலும் தலா 2 பேருக்கும், மராட்டியத்திலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா ஒருவருக்கும் என மொத்தம் 17 பேருக்கு பாதித்துள்ளது.
இந்த வைரஸ் அதிகளவில் 93% இங்கிலாந்தில்தான் பரவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.